Sandy Master : பிக்பாஸ் சாண்டி வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துகள்!

பிக் பாஸ் சாண்டி

பிக்பாஸ் பிரபலமும், நடன இயக்குநருமான சாண்டியின் மனைவி இரண்டாவது முறை கர்ப்பம் தரித்திருக்கிறார்.

  • Share this:
    சின்னத்திரையில் தனது நடனத்தால் சிறந்த அங்கீகாரத்தைப் பெற்ற நடன இயக்குநர் சாண்டி, தமிழ் சினிமாவிலும் கால் பதித்து வெற்றி பெற்றுள்ளார். ரஜினியின் காலா படத்தில் பணியாற்றிய இவர், பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, அங்கு பாடல்கள், நடனம் என ஜாலி ரகளைகளின் மூலம் பிரபலமானார். சினிமா பாடல்களை ரீமிக்ஸ் செய்து அங்கு நடந்த செயல்களை வைத்து சாண்டி பாடிய பாடல்களுக்கு ரசிகர்கள் இருந்தனர். அதோடு அவரது மகள் லாலாவும் எல்லோருக்கும் பரிச்சயமானார்.




    பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் சாண்டி. சமீபத்தில் அவரது நடன அமைப்பில் உருவான கர்ணன், பாரிஸ் ஜெயராஜ், குட்டி பட்டாசு ஆல்பம் போன்ற பல பாடல்கள் ரசிகர்கலின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    இந்நிலையில் தற்போது சாண்டி வீட்டில் ஓர் மகிழ்ச்சியான விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால் அவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். அவருக்கு வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சாண்டியின் மனைவி டார்த்தி. இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் சாண்டி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: