பாலாஜியின் பின்னால் சுற்றும் ஷிவானி... கலாய்க்கும் ரம்யா பாண்டியன்

பாலாஜி, ஷிவானி, ரம்யா பாண்டியன்,

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியுடன் ஷிவானி விரும்பி பழகுவது குறித்து ரம்யா பாண்டியன் கலாய்க்கும் காட்சிகள் இன்றைய ப்ரமோவில் இடம்பெற்றுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிக் பாஸ் நிகழ்ச்சியானது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ரியோ, பாலாஜி, சம்யுக்தா, சோம், ஆரி, அனிதா மற்றும் சுஜித்ரா ஆகியோர் உள்ளனர். வாரந்தோறும், லக்ஜுரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களில் இருந்து வீட்டின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த வாரத்திற்கான லக்ஜுரி பட்ஜெட் டாஸ்கான 45 மணி நேரம் நடைபெறும்  மணிகூண்டு டாஸ்க் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதில் போட்டியாளர்கள் கடிகாரமாக மாறி சரியான நேரத்தை கணக்கிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 3 நபர்கள் கொண்ட 5 அணிகளாக பிரிந்து ஒவ்வொரு நபர்களும் 3 மணிநேரத்திற்கு ஒரு முறை நேரத்தை கணக்கிட்டனர். மழை, வெயில், நடு இரவு என இடைவிடாமல் இந்த டாஸ்கானது நடைபெற்ற நிலையில் இன்று இந்த டாஸ்க் நிறைவடைந்துள்ளது இன்று வெளியான முதல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் முடிவை தெரிந்துகொள்ள மிகவும் பதற்றத்துடன் அமர்ந்து இருக்கிறார்கள்.ஒவ்வொரு அணியும் கணித்த நேரம் குறித்து விரிவாக டிவியில் தெரிவிக்கப்படுகிறது. இதில் இரண்டு அணியினர் மிகவும் குறைந்த அளவு வித்யாசத்தில் கணித்திருப்பதாக தெரிகிறது. இதில் வெற்றி பெற்ற 2 அணிகளில் இருக்கும் 6 போட்டியாளர்கள் அடுத்த வார தலைவர் டாஸ்கில் பங்கேற்க தேர்வாகி இருக்கிறார்கள் என்று பிக் பாஸ் அறிவித்தார். அதில் அர்ச்சனா, சோம், சம்யுக்தா, ஷிவானி, ஆஜித் மற்றும் ரமேஷ் ஆகியோர் உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு ஒரு டாஸ்க் வைக்கப்பட்டு அடுத்த வாரத்திற்கான தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார், அவரை அடுத்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது புரோமோவில் ரம்யா, ஆஜித் மற்றும் சம்யுக்தா ஆகியோர் ஒன்றாக அமர்ந்து ஷிவானி குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ஷிவானி, சுஜித்ரா டாஸ்கை சுவாரஸ்யமாக  செய்யவில்லை என ஆஜித் கூறுகிறார். அதற்கு ரம்யா, பாலாவை எண்டர்டைன் பண்ணும் ஒரு வேலையை மட்டும் தான் ஷிவானி நாள் முழுவதும் செய்வதாக கூறுகிறார். மேலும் பாலா மாமா, பாலா மாமா என பின்னாடியே சுற்றுகிறார் , தவிர வீட்டில் இன்வால்வ்மெண்ட் இல்லை என கலாய்க்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.இதனிடையே நேற்று ஆரி, ரியோவின் குடும்பத்தினர் டிவியில் பேசினர். ஆரியின் மனைவி பிக் பாஸ் வீட்டில் உள்ள திரையில் தோன்றி திருமண வாழ்த்து தெரிவித்தார். நாங்கள் நலமுடன் இருக்கிறோம், இங்கு இருப்பவர்கள் நன்றாக பார்த்து கொள்கிறார்கள். உங்களது விளையாட்டை சிறப்பாக விளையாடுகிறீர்கள் அத்தான் என அழகாக இலங்கை தமிழில் பேசினார்.
இதேபோல ரியோ  மணிக்கூண்டு டாஸ்க் செய்து கொண்டிருந்த நேரத்தில் திரையில் தோன்றிய அவரது மனைவி ஸ்ருதி, பிறந்தநாள் வாழ்த்து கூறியதை திரையில் பார்த்ததாக தெரிவித்தார். மேலும் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும்படியும் கூறினார். அவருடன் அவர்களது அழகான மகளும் இருந்தார். இதனால் ரியோ, ஆரி கண் கலங்கினர்.
Published by:Vinothini Aandisamy
First published: