Home /News /entertainment /

உங்கள் கண்கள் செமயா இருக்கு... பிக் பாஸ் ராஜுவை பாராட்டிய விஜய்!

உங்கள் கண்கள் செமயா இருக்கு... பிக் பாஸ் ராஜுவை பாராட்டிய விஜய்!

விஜய் - ராஜு

விஜய் - ராஜு

கொஞ்ச நேரம் விஜய்யுடன் பேசிக் கொண்டிருந்தாராம் ராஜு. அப்போது உங்கள் கண்கள் செமயாக உள்ளது என்று பாராட்டினாராம் விஜய்.

    பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் பீஸ்ட் படப்பிடிப்பில் தான் விஜய்யை சந்தித்து பேசிய சுவாரஸ்ய விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    நடந்து முடிந்த பிக் பாஸ் 5-ம் சீசனில் சுமார் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் வெளியேறிய நிலையில், இறுதி சுற்றுக்கு 5 பேர் மட்டுமே மக்களால் தேர்வு செய்யப்பட்டனர். எல்லா பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் போலவே இந்த முறையும் போட்டியாளர்களுக்குள் கடும் போட்டி நிலவி வந்தது.

    கலந்து கொண்ட 20 போட்டியாளர்களில் இறுதியாக ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் ஆகியோர் மீதமிருந்தனர். இவர்களுக்குள் பல முனை போட்டிகள் நடந்து வந்தது. யார் இதில் வெற்றி பெறுவார்கள் என்று மக்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்தபோது, மக்களுக்கு அதிகம் பிடித்த ராஜு வெற்றி பெற்று கோப்பையை வாங்கினார். இவருக்கு அடுத்ததாக பிரியங்கா இரண்டாவது இடம் பிடித்தார்.

    வருங்கால மனைவியுடன் குக் வித் கோமாளி புகழ்? வலம் வரும் புகைப்படம்!

    நிகழ்ச்சி முடிந்ததும் இமான் அண்ணாச்சி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார் ராஜு. இந்நிலையில் சமீபத்தில் வீடியோ கால் ஒன்றில் பேசிய அவர், பிக்பாஸ் செல்வதற்கு 15 நாட்கள் முன்பு பீஸ்ட் படப்பிடிப்பில் விஜய்யை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். விஜய் யாராவது புதிதாக செட்டிற்கு வந்தால் கண்டுபிடித்துவிடுவாராம். அப்படித்தான் என்னையும் அழைத்து புதுசா எனக் கேட்க, நான் நெல்சனுடன் வேலை செய்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார் ராஜு.

    நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

    பின்னர் கொஞ்ச நேரம் விஜய்யுடன் பேசிக் கொண்டிருந்தாராம் ராஜு. அப்போது உங்கள் கண்கள் பயங்கரமா இருக்கு என்று பாராட்டினாராம் விஜய். பின் சிறு வயதிலிருந்தே விஜய்க்காக சேர்த்து வைத்த ஒரு புத்தகத்தை ராஜு காட்ட, அதைப் பார்த்துவிட்டு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தாராம் விஜய்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vijay, Thalapathy vijay

    அடுத்த செய்தி