Bigg Boss Mugen: கவின் இயக்கத்தில் நடிக்கும் பிக் பாஸ் முகென்?

முகென்

ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகும் இதில் முகெனுக்கு ஜோடியாக மீனாக்‌ஷி நடிக்கிறார்.

  • Share this:
    பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகென் புதிய படத்தில் நடிக்கிறார்.

    பிக் பாஸ் 3-ம் சீசனில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டவர் மலேசியாவைச் சேர்ந்த பாடகரான முகென். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் நடிக்கும் புதிய படத்துக்கு ‘வேலன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை கவின் என்பவர் இயக்குகிறார்.

    Serial Actor Indira Kumar: தமிழ் சீரியல் நடிகர் இந்திர குமார் தற்கொலை

    தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். ரொமாண்டிக் காமெடி படமாக உருவாகும் இதில் முகெனுக்கு ஜோடியாக மீனாக்‌ஷி நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    கொரோனா வழிமுறைகளை பின்பற்றி வேலன் படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: