முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கவின் உடன் பிரேக்-அப் ஆக இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த லாஸ்லியா!

கவின் உடன் பிரேக்-அப் ஆக இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த லாஸ்லியா!

கவின் - லாஸ்லியா

கவின் - லாஸ்லியா

Bigg Boss Kavin Losliya : பிக் பாஸ் வீட்டிற்குள் விஷயங்கள் வேறுபட்டதாக இருந்தது. நாங்கள் இருவரும் மிகவும் வலுவான பிணைப்பை உணர்ந்தோம்.

  • 1-MIN READ
  • Last Updated :

கவின் - லாஸ்லியா ஜோடி பற்றி பெரிய அளவிலான அறிமுகமே தேவை இல்லை. விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 3-இல் கலந்து கொண்ட கவினும் லாஸ்லியாவும் செய்த ரொமான்ஸ் இருக்கிறதே - அடடா... இன்றும் கூட "அந்த காதலுக்கும், அந்த காதல் காட்சிகளுக்கும்" ரசிகர்கள் ஏராளம்!

லாஸ்லியா மரியநேசன் - இலங்கையில் செய்தி தொகுப்பாளராகவும், மாடலாகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகப் பங்கேற்று, தமிழ்நாட்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்தார் லாஸ்லியா.

கவின், பிக் பாஸ் சீசன் 3-க்குள் வரும் போதே தனக்கென போதுமான ரசிகர்களை சம்பாத்திருந்தார் என்றே கூறலாம். லயோலா கல்லூரியில் தனது படிப்பை முடித்த கையோடு விஜய் டிவியின் ஆடிஷன்களில் கலந்து கொண்ட கவின் 'கானா காணும் காலங்கள்' சீரியலின் காலேஜ் வெர்ஷனில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார்.

பிறகு தாயுமானவன், சரவணன் மீனாட்சி சீசன் 1 போன்ற சீரியல்களில் துணை வேடங்களில் நடித்தார். சரவணன் மீனாட்சியின் இரண்டாவது சீசனில் கவின் ஏற்றுநடித்த 'வேட்டையன்' என்கிற கதாபாத்திரம் இன்றும் அவருக்கான ஒரு அடையாளமாக திகழ்கிறது.

also read : தளபதி 66-ல் ராஷ்மிகா மந்தனா, எஸ்.எஸ்.தமன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இப்படியான கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு இடையே காதல் மலர்ந்த பிறகே பிக் பாஸ் சீசன் 3 ஷோ கலைக்கட்டியது என்று கூறினால் அது மிகையாகாது. குறிப்பாக லாஸ்லியாவின் தந்தை கவினை நேரடியாக கண்டித்த எபிசோட் அனல் பறந்தது!

பணம் இருக்கும் சூட்கேஸை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது கவின், லாஸ்லியாவுக்காக காத்திருப்பதாக கூறி சென்றார். லாஸ்லியா வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே கவின் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினார் என்று ரசிகர்கள் கிசுகிசுக்கும் கவின் - லாஸ்லியாவின் காதல் பேசுபொருளானது!

also read : ஆஹா... சிவகாமி அம்மாவிடம் கையும் களவுமாக சிக்கப்போகும் சந்தியா,சரவணன்.. அடுத்தது என்ன?

ஆனால் பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பிறகு கவின் - லாஸ்லியா ஜோடி ஒருபோதும் இணையவில்லை. இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்கிற சரியான காரணமும் ஒருபோதும் வெளிப்படுத்தப்படவில்லை.

சமீபத்தில் லாஸ்லியா அளித்த ஒரு பேட்டியில், தான் ஏன் கவினுடனான காதலை முறித்துக்கொண்டேன் என்கிற உண்மையான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விஷயத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் விஷயங்கள் வேறுபட்டதாக இருந்தது. நாங்கள் இருவரும் மிகவும் வலுவான பிணைப்பை உணர்ந்தோம். ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அந்த பிணைப்பு முற்றிலும் காணாமல் போனது. மேலும் சில சமூக அழுத்தத்தின் காரணமாக எங்களுக்கு இடையிலான விஷயங்கள் எதுவும் சரியாக வேலை செய்யவில்லை, எனவே தனித்தனியாக செல்ல முடிவு செய்தோம் என்று கூறி உள்ளார். மேலும் லாஸ்லியா, தானும் கவினும் பேச்சு வார்த்தையில் இல்லை என்பது உண்மைதான் என்பதையும் ஒப்புக்கொண்டார்.

also read : பேக் போஸில் ஹாட்டாக புகைப்படம் வெளியிட்ட வேதிகா

கடந்த ஆண்டு வெளியான ஃப்ரெண்ஷிப் திரைப்படம் வழியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான லாஸ்லியா தற்போது பிரபல இயக்குனர் கே.எஸ். ரவிகுமாரின் 'கூகுள் குட்டப்பா' படத்தில் தனது சக பிக் பாஸ் 3 போட்டியாளரான தர்ஷனுடன் ஜோடி சேர்ந்து உள்ளார். மறுகையில் கவின் நட்புனா என்னான்னு தெரியுமா, லிப்ட் போன்ற திரைப்படங்களில் ஹீரோ அவதாரம் எடுத்த கையோடு, ஊர் குருவி என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

First published:

Tags: Losliya