இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் லாஸ்லியாவுக்கு ஆர்மி உருவாகும் அளவுக்கு ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா அடிக்கடி கேமரா முன்பு நின்றுக்கொண்டு சில பாடல்களை முனுமுனுப்பார். இவரின் வாய்ஸ்க்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியாவின் காதல் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த இருவரும், தங்களுக்குள் ஒத்து வராததால் பிரிந்துவிட்டோம் என வெளிப்படையாக நேர்காணலில் கூறினார்கள்.
தற்போது லாஸ்லியா திரைப்படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருக்கிறார். ஃப்ரண்ட்ஷிப் திரைப்படம் தான் லாஸ்லியாவின் முதல் திரைப்படம். தற்போது மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற ஆண்ட்ராய்டு குட்டப்பன் என்ற படம் தமிழில் கூகுள் குட்டப்பன் என்று ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் லாஸ்லிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லாஸ்லியாவுக்கு ஜோடியாக பிக்பாஸ் 3 யில் சக போட்டியாளரான தர்ஷன் நடித்துள்ளார்.
இந்நிலையில் லாஸ்லியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக்கர்கள் ஹேக் செய்து லாஸ்லியாவின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர்.
அதில் லாஸ்லியா லீக்ஸ் என்ற தலைப்பில் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேர் செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்த #hackison என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளனர். தற்போது ஹேக்கர்களிடம் இருந்து இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்டெடுத்துள்ளார் லாஸ்லியா. அந்த புகைப்படமும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேர் செய்யப்படுவது சர்வசாதாரணமாக நடந்துவருகிறது. அந்த வலையில் தற்போது லாஸ்லியாவும் சிக்கி மீண்டுள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.