முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித்தின் 2 புதிய படங்களிலும் நடிக்கும் பிக்பாஸ் கவின்?

அஜித்தின் 2 புதிய படங்களிலும் நடிக்கும் பிக்பாஸ் கவின்?

அஜித் - கவின்

அஜித் - கவின்

Bigg Boss Kavin | லயோலா காலேஜில் டிகிரி முடித்த கவின் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் காலேஜ் வெர்ஷனில் நடித்து புகழ் பெற்றார்.

தமிழ் வெள்ளித்திரையில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் நடிகர் அஜித்குமாருக்கு ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் வெளியான டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கத்தில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

ஹெச். வினோத் - போனி கபூர் - அஜித் கூட்டணியில் வெளியான இரண்டாவது படம் வலிமை. ஏற்கனவே இவர்கள் மூவர் கூட்டணியில் வெளியான வெற்றிப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் வித்தியாசமான கதை களத்துடன் அஜித்தின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. நேர்கொண்ட பார்வை அஜித்தின் 59-வது படமாகும்.

கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான வலிமை அஜித்தின் 60-ஆவது திரைப்படமாக அமைந்தது. இதனிடையே நடிகர் அஜித் டைரக்டர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து கிட்டத்தட்ட தொடர்ந்து 4 படங்களில் பணியாற்றியதை போலவே, தற்போது ஹெச். வினோத் - போனி கபூர் கூட்டணியில் தொடர்ந்து மூன்றாவது படம் நடிக்க உள்ளார். தற்போது வரை இந்த படம் AK61 என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. AK61-ஐ தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள AK62-வை டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்.

இந்த திரைப்படங்களில் அஜித்துடன் நடிக்க உள்ள நடிகர்களின் பட்டியல் குறித்த சில தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது. அதன்படி பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் அஜித்தின் இவ்விரு (AK61 & AK62) திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. நீங்கள் சின்னத்திரையில் ஸ்டார் விஜய் டிவி-யை தொடர்ந்து பார்த்து வருபவர் என்றால் நடிகர் கவின் பற்றி உங்களுக்கு பெரிய அறிமுகம் தேவை இருக்காது.

also read : ரிலீஸிற்கு முன்பே வசூலில் பட்டைய கிளப்பும் பீஸ்ட்..

லயோலா காலேஜில் டிகிரி முடித்த கவின் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் காலேஜ் வெர்ஷனில் நடித்து புகழ் பெற்றார். பின் தாயுமானவன், சரவணன் மீனாட்சி சீசன் 1 மற்றும் சீசன் 2-வில் நடித்து தனி அடையாளம் பெற்றார். பிக் பாஸ் சீசன் 3-யில் பங்கேற்கும் முன்னரே ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த அவர், அங்கு லாஸ்லியாவுடனான காதல் காரணமாக இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

also read : மாடர்ன் உடையில் கலக்கும் ராஜா ராணி சந்தியா..

இதனிடையே கவின் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னான்னு தெரியுமா, லிஃப்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிக்கும் ஊர் குருவி என்ற படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், AK61 & AK62 திரைப்பட குழுவினர் கவின் தங்கள் டீமில் இணைந்துள்ளது உண்மையா என்பதை வெளிப்படுத்தி உள்ளனர். அதன்படி AK61 குழுவினர் இந்த ப்ராஜக்ட்டில் கவின் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

ஆனால் விக்னேஷ் சிவனின் AK62 குழுவினர், இந்த ப்ராஜக்ட்டில் கவினுக்கு ஏற்ற ஒரு கேரக்டர் இருப்பதாகவும் இதில் அவர் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். எனினும் AK62-வில் கவின் நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

First published:

Tags: Actor Ajith, Cinema