விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தமிழ் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட கவின் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். பின்னர் வினீத் இயக்கத்தில் லிஃப்ட் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கவின். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது படக்குழு.
லிஃப்ட் படத்தின் மோஷன் போஸ்டரை லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் வெளியிட உள்ளனர். இதனிடையே சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இணைந்து உதவி இயக்குநராக பணியாற்றிய கவின், பிக்பாஸ் 3 வின்னர் முகென் ராவ் ஹீரோவாக நடிக்கும் ‘வேலன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனாக்ஷி, பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். காதல், காமெடி என பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தப் படம் உருவாகி வருகிறது.
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.