நான் தீவிரக் காதலன்! காதல், திருமணம் குறித்து கவின் அளித்த பளீச் பேட்டி!

நான் தீவிரக் காதலன்! காதல், திருமணம் குறித்து கவின் அளித்த பளீச் பேட்டி!
கவின்
  • Share this:
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் காதல் மன்னனாக வலம் வந்த கவின் காதல் மற்றும் திருமணம் குறித்த கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கேரக்டரில் நடித்து பிரபலமானவர் கவின். நட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகனாக நடித்திருக்கும் அவர், கடந்த ஆண்டு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஆரம்பம் முதலே நிகழ்ச்சியில் காதல் நாயகனாக வலம் வந்த கவினுக்கு ரசிகர்களும் ஏராளம். லாஸ்லியா - கவின் இடையேயான காதல் அதற்கு எதிர்ந்த எதிர்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் பேசு பொருளாகின. இதையடுத்து வெளியில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று கவின் - லாஸ்லியா இருவரும் முடிவெடுத்தனர். ஆனால் நிகழ்ச்சி முடிவடைந்ததற்கு பின் இருவரும் தனித்தனியே தங்களது பணிகளில் பரபரப்பாகிவிட்டனர்.


இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகர் கவின், ’தான் இப்போதும் சிங்கிள் தான் என்று கூறியுள்ளார். மேலும் அவர் அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “நான் பள்ளி, கல்லூரி படிக்கும் காலங்களில் காதல் என்று நான் நினைத்த விஷயங்கள் அனைத்தும் தற்போது நான் காதல் என்று நினைக்கும் விஷயங்களிலிருந்து வேறுபட்டவை. அப்போது, ஒரு அழகான திருச்சி பெண்ணுடன் வாழ வேண்டும் என்று விருப்பப்பட்டேன்.ஆனால், தற்போது அது மாறுபட்டுள்ளது. எதிர்பார்ப்பு இல்லாமல் பழகும் உறவுதான் நட்பு என்று நாம் வரையறுப்போம். அதையே நான் காதலிலும் பொருத்திப் பார்க்க விரும்புகிறேன். ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே அவரை ஏற்றுக்கொள்ள முடிந்தால், அவரிடமிருந்து எதையும் எதிர்பாக்காமல் இருந்தால் காதல் வளர்ச்சியடையும். அது கட்டுப்பாடுகள் இல்லாமல், நேர்மையாக இருக்கவேண்டும்.நான், மிகத் தீவிரமாக காதல் செய்பவன். ஒருவேளை நான் ஒருவரை காதல் செய்தால், அவரைச் சந்தோசப்படுத்த எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பேன். எந்த விஷயத்தை அவர் குழந்தைப் போல ரசிக்கிறாரா அந்தச் சிறிய விஷயத்தை செய்ய விரும்புவேன். அந்த விஷயங்கள் குறித்து அவருடைய நண்பர்கள், உறவினர்களிடம் கேட்டறிந்துகொண்டு எதிர்பாராத நேரத்தில் அதை நிறைவேற்றி ஆச்சர்யமளிப்பேன். இது சினிமாத்தனமானது. ஆனால், நான் அப்படித்தான்.நான் முதலில் பெண்களிடத்தில் கண்களைத்தான் பார்ப்பேன். எளிமையாகவும் சுதந்திரமாகவும் இருக்கும் பெண்களை நான் விரும்புவேன். உண்மையில் எனக்குத் திருமணம் பற்றித் தெரியவில்லை. திருமணம் என்பது நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. திருமணம் முடிந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சந்தோஷமாக வாழும் தம்பதிகளையும், திருமணம் ஆன ஆறே மாதங்களில் விவாகரத்துப் பெற்றத் தம்பதிகளையும் எனக்குத் தெரியும். திருமணம் மட்டுமல்ல எல்லா விஷயத்திலும் காதல்தான் முக்கியம்” இவ்வாறு கவின் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: திருமணத்தை நிறுத்திவிட்டார்... தர்ஷன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஷனம் ஷெட்டி...!
First published: January 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading