சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறாரா பிக்பாஸ் கவின்?

சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறாரா பிக்பாஸ் கவின்?
சிவகார்த்திகேயன் உடன் கவின்
  • Share this:
நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் கவின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தை அடுத்து இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் கவினும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயனுடன் கவின் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இத்தகவல் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் கவின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.




விஜய் டிவி சீரியலில் நடிகராக அறிமுகமான கவின் நட்புன்னா என்னானு தெரியுமா படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவுடனான காதல், வி ஆர் தி பாய்ஸ் கேங்கின் நட்பு ஆகிய தனது நடவடிக்கைகளால் அதிகமான ரசிகர்களைச் சேர்த்து அவர்களது கவனத்தையும் பெற்று வருகிறார் கவின்.
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading