ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆன்மாவின் புத்துணர்ச்சி! ரியாஸ்கான் மகனின் நட்புக்கு நெகிழ்ந்த ஜூலி!

ஆன்மாவின் புத்துணர்ச்சி! ரியாஸ்கான் மகனின் நட்புக்கு நெகிழ்ந்த ஜூலி!

ஷாரிக் - ஜூலி

ஷாரிக் - ஜூலி

ஷாரிக் – ஜூலி இடையிலான உறவு நட்புடன் இருக்குமா அல்லது அடுத்த கட்டத்தை நோக்கி நகருமா என அவர்களது ஃபாலோயர்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ரியாஸ் கானின் மகன் ஷாரிக் உடன் பிக்பாஸ் ஜூலி வெளியிட்டுள்ள ஃபோட்டோக்கள் வைரலாகியுள்ளன. இருவரும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்து ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார் ஜூலி.

  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்த ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அங்கே இவரது நடவடிக்கைகள் கிண்டலுக்கு ஆளானது. ஜூலியை ட்ரால் செய்பவர்களைப் போலவே அவருக்கான ரசிகர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

  முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலியும், 2ஆம் சீசனில் பங்கேற்ற நடிகர் ரியாஸ்கானின் மகன் ஷாரிக்கும் நெருங்கிப் பழகி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களது நட்பு தொடர்ந்து வரும் நிலையில், இருவரும் டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

  சுந்தர சோழன் - அருள்மொழி வர்மனின் கடந்த கால அப்பா-மகன் உறவு - ரியாக்ட் செய்த ஜெயம்ரவி!

  இவை எதையும் கண்டுகொள்ளாத ஷாரிக் –ஜூலி ஜோடி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில்,புதிய க்ளிக்குகளை பகிர்ந்துள்ள ஜூலி, ‘ஆன்மாவின் புத்துணர்ச்சி’  என்று கேப்ஷன் வைத்துள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Julie (@mariajuliana_official)  ஒரு இனிப்பான நட்பு ஆன்மாவுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் என்று ஷாரிக்கை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் ஜூலி. இந்த பதிவு இன்ஸ்டாவில் அதிக விருப்பங்களைப் பெற்று வருகிறது.

  ஷாரிக் – ஜூலி இடையிலான உறவு நட்புடன் இருக்குமா அல்லது அடுத்த கட்டத்தை நோக்கி நகருமா என அவர்களது ஃபாலோயர்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

  இயக்குநர் பிரவீன் காந்தியால் அஜித்துக்கு கிடைத்த வெற்றிப்படம்!

  25 வயதாகும் ஷாரிக், 2016-ல் வெளியான பென்சில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அடுத்து உக்ரம், ஜிகிரிதோஸ்து படங்களில் நடித்த ஷாரிக் தற்போது மோகன் தாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1-ல் இடம்பெற்ற ஷாரிக் 21ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Bigg boss Julie, Kollywood