நர்ஸ் பணிக்கு ஏன் திரும்பவில்லை - ரசிகரின் கேள்விக்கு ஜூலி பதில்

நர்ஸ் பணிக்கு ஏன் திரும்பவில்லை - ரசிகரின் கேள்விக்கு ஜூலி பதில்
நடிகை ஜூலி
  • Share this:
தமிழகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் செவிலியர் பணிக்கு ஏன் திரும்பவில்லை என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கு நடிகை ஜூலி பதிலளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் ஜுலி. மக்களிடம் கிடைத்த ஆதரவின் மூலம் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜூலி அடிப்படையில் ஒரு நர்ஸ்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறிய அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன. இதனால் முழுநேர நடிகையாக மாறிய அவர் நர்ஸ் பணிக்கு குட் பை சொன்னார்.


இந்நிலையில் கொரோனா பரவுவதைத் தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதை அடுத்து திரைப்பட படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் ஜூலி.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் ஜூலி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் உங்கள் நர்ஸ் பணிக்கு திரும்பவில்லையா என்று ரசிகர் ஒருவர் ஜூலியிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஜூலி, "பெரும்பாலானோர் இதே கேள்வியை என்னிடம் கேட்கின்றனர். நான் இப்போது திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். செவிலியர் பணி என்பது ஒரு புனிதமான வேலை. அதற்கு முழு அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் தேவை. மற்ற பணிகளைப் போல செவிலியர் பணியை பார்ட் டைம் வேலையாகச் செய்ய முடியாது.ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்வது மிகவும் கடினமானது. படப்பிடிக்குச் செல்வதால் நர்ஸ் பணிக்குச் செல்வதில் தாமதமாகலாம். அப்போது நோயாளிகள் காத்திருக்க வேண்டி வரும். நோயாளிகளின் உயிரை என்னால் பணயம் வைக்க முடியாது என்று கூறியுள்ளார்.இதை தனது ட்விட்டரிலும் நடிகை ஜூலி பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ட்விட்டர் ட்ரெண்டிங்கில் மங்காத்தா - ரசிகர்கள் கொண்டாட்டம்First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading