Home /News /entertainment /

7 வருடங்களுக்கு முன் பிக்பாஸ் சோம் சேகர் உடன் ஜூலி எடுத்த போட்டோ

7 வருடங்களுக்கு முன் பிக்பாஸ் சோம் சேகர் உடன் ஜூலி எடுத்த போட்டோ

சோம் சேகர் - ஜூலி

சோம் சேகர் - ஜூலி

7 வருடங்களுக்கு முன் பிக்பாஸ் பிரபலம் சோம் சேகர் உடன் எடுத்த புகைப்படத்தை நடிகை ஜூலி வெளியிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் ஜுலி. மக்களிடம் கிடைத்த ஆதரவின் மூலம் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜூலி அடிப்படையில் ஒரு நர்ஸ்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறிய அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன. இதனால் முழுநேர நடிகையாக மாறிய அவர் நர்ஸ் பணிக்கு குட் பை சொன்னார். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வாழ்வின் முக்கிய தருணங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 7 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கும் ஜூலி. அதில் பிக்பாஸ் தமிழ் 4-வது சீசன் போட்டியாளர் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருக்கும் போட்டோவில் பிக்பாஸ் பிரபலம் சோம் சேகர் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் இருவரும் 7 வருடங்களுக்கு முன்பே பழக்கமானவர்கள் என்பது தெரிய வருகிறது.



தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சோம் சேகர். சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் பிக்பாஸ்க்குப் பின் பிரபலமானார். 4-வது சீசனில் இறுதிச்சுற்று வரை வந்த சோம் சேகர் மூன்றாம் இடத்தைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published:

Tags: Bigg boss Julie

அடுத்த செய்தி