ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹர்பஜன் சிங்கின் அடுத்தப் படத்தில் ஜி.பி.முத்து!

ஹர்பஜன் சிங்கின் அடுத்தப் படத்தில் ஜி.பி.முத்து!

ஹர்பஜன் சிங் - ஜிபி முத்து

ஹர்பஜன் சிங் - ஜிபி முத்து

இந்தப் படத்தை ஃப்ரெண்ட்ஷிப் படத்தை இயக்கிய ஜான் பால் இயக்குகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை முக்கால்வாசி முடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். குறிப்பாக அவ்வப்போது அவர் தமிழில் ட்வீட் செய்வதும், தமிழகத்தின் சம்பவங்களுடன் அல்லது திரைப்படங்களுடன் தொடர்புப்படுத்தி பதிவுகளை பதிவிடுவதும் பிரபலம். இதையடுத்து அவர் ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். அதில் லாஸ்லியா, அர்ஜுன் மற்றும் சதீஷ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சினேகாவின் நோ மேக்கப் படங்கள்!

இதையடுத்து தற்போது தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை 70 சதவீதம் முடித்துள்ளார். இந்தப் படத்தை ஃப்ரெண்ட்ஷிப் படத்தை இயக்கிய ஜான் பால் இயக்குகிறார். இது மர்மம் கலந்த பிளாக் காமெடி படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதில் பிக் பாஸ் ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார். இதில் ஜி.பி.முத்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

First published:

Tags: Harbhajan Singh