வசந்தபாலன் படத்தில் இணைந்த பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி

பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி

  • Share this:
இயக்குநர் ஷங்கருடன் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவராவார்.

தற்போது அவர், தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஜி.வி.பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் ‘ஜெயில்’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றன. இவற்றில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் இணைந்து பாடிய ‘காத்தோடு காத்தானேன்...’ பாடல் 14 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

தற்போது, விருதுநகரில் காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான க்ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.அந்நிறுவனத்தின் முதல் படத்தை வசந்தபாலனே இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதைநாயகனாகவும், துஷாரா விஜயன் நாயகியாகவும், சிங்கம்புலி, பரணி மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். பிப்ரவரி 18-ம் தேதி இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தியும் இந்தப் படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
வசந்தபாலன் உடன் பணியாற்றுவது சிறந்த அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கும் சுரேஷ் தாத்தா என்ன கேர்கடரில் நடிக்கிறார் என இதுவரை வெளியில் சொல்லவில்லை. இந்தப் படத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அர்ஜூன் சிதம்பரமும் நடிக்கிறார்.
Published by:Sheik Hanifah
First published: