தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கவின்!

நடிகர் கவின்

 • Share this:
  கவின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 13-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

  விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

  அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின், லாஸ்லியாவுடன் காதலில் விழுந்தார். இந்நிகழ்ச்சி கவினை அதிக ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது என்று கூட கூறலாம்.

  பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர், கவின் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் ‘டாக்டர்’ திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கவின் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

  இந்நிலையில் கவின் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈகா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிகில் திரைப்படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

  இத்திரைப்படத்துக்கு ‘லிப்ட்’ என்று பெயரிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் வரும் 13-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இச்செய்தி கவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  மேலும் படிக்க: மிஷ்கின் ஸ்டைலில் வெளியான விஷாலின் துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக்!
  Also Read: வாஜ்பாய் பெற்ற மாபெரும் தோல்விக்கு காரணமானவரின் மகனை வசப்படுத்திய மோடி...!

  கொரோனா அச்சத்தால் ஆம்னி பஸ் கட்டணத்தை விட சரிந்தது விமான கட்டணம்...!

  வகுப்பு நண்பர்களின் நலன் கருதி நீண்ட விடுமுறை எடுக்கிறேன்...! காய்ச்சல் & சளி உள்ளதாக மாணவன் விடுப்பு விண்ணப்பம்
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
  Published by:Sheik Hanifah
  First published: