சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக பரவும் தகவல் - பிக்பாஸ் டேனியல் வக்கீல் நோட்டீஸ்

நடிகர் டேனியல்

பிக்பாஸ் புகழ் நடிகர் டேனி தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிப்பது போல சமூக வலைத்தளங்களில் நடந்து கொள்வோர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

  • Share this:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் டேனியல் நடித்திருந்தார். அதில் அவர் பேசிய ஒரு வசனத்தின் மூலம் அவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் வந்தன. இதையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்த அவரை, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்தது.

பிக்பாஸ் 2 போட்டியாளராக 70 நாட்களுக்கும் அதிகமாக வீட்டில் தங்கியிருந்து வெளியேறிய டேனியல் சில நாட்களில் தான் காதலித்து வந்த டெனிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

டேனியல் - டெனிஷா தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் டேனியல் சிறுமியுடன் சமூகவலைதளத்தில் பாலியல் ரீதியாக பேசியதாகவும், தொடர்ந்து சிறுமிகள் பலரிடம் டேனியல் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

டேனியல் பேசுவது போன்ற ஒரு சில ஸ்க்ரீன்ஷாட்கள் வெளியானதால் சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக சமூகவலைதளங்களில் பேசத் தொடங்கினர். இந்த நிலையில் தனது வழக்கறிஞர் மூலமாக பொது நோட்டீஸ் ஒன்றை பிறப்பித்துள்ள நடிகர் டேனி, முகாந்திரம் இல்லாத பொய்யான குற்றச்சாட்டு ஒன்று தன் மீது சுமத்தப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து அதனை பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Daniel Annie Pope (@danianniepope)


நடிகர் டேனியல் விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கும்  ‘லாபம்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டேனியல்.
Published by:Sheik Hanifah
First published: