ஓவியாவை அக்கா என அழைக்கும் பிக்பாஸ் பிரபலம் - ரசிகர்கள் குஷி

ஓவியாவை அக்கா என அழைக்கும் பிக்பாஸ் பிரபலம் - ரசிகர்கள் குஷி

பிக்பாஸ் ஓவியா

ஓவியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரை அன்புடன் அக்கா என அழைத்துள்ளார் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ்.

  • Share this:
‘களவாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

திரைப்படங்களால் பெற்ற புகழை விட இந்நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டார் ஓவியா. தனது வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் மக்கள் மத்தியில் இடம்பிடித்த ஓவியாவுக்கு ஆர்மி ஆரம்பித்து கொண்டாடினர் அவரது ரசிகர்கள்.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஓவியா சமீபத்தில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பாளர்கள் உருவாக்கிய ஹேஷ்டேக்கை பதிவிட்டு நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளானார். இந்நிலையில் இன்று தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஓவியாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர்.



தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் தனது வாழ்த்து பதிவில், “பிறந்தநாள் வாழ்த்துகள் ஓவியா அக்கா, மகிழ்ச்சியுடனும், ஆசிர்வாதத்துடனும் இருங்கள்” என்று ஓவியாவின் காமன் டிபியையும் வெளியிட்டுள்ளார். அவரது இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் நீங்களும் ஓவியா ஆர்மி தானா என்று கேள்வி எழுப்பியிருப்பதோடு அவர் ஓவியாவை அக்கா என அழைத்திருப்பதையும் குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகை ஓவியா நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: