நடுரோட்டில் ஐஸ்வர்யா - யாஷிகா பகிர்ந்த அன்பு முத்தம்... வைரலாகும் வீடியோ

நடிகை ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் சென்னையில் ஆட்டோவில் சுற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.

நடுரோட்டில் ஐஸ்வர்யா - யாஷிகா பகிர்ந்த அன்பு முத்தம்... வைரலாகும் வீடியோ
யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா
  • News18
  • Last Updated: December 29, 2018, 3:25 PM IST
  • Share this:
நடிகை ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் சென்னையில் ஆட்டோவில் சுற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமா நடிகைகளான யாஷிகா ஆனந்த் , ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நெருங்கிய நண்பர்களாக மாறினர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் இருந்த போது பெரும்பாலான வாரங்களில் நிகழ்ச்சியின் பேசுபொருளாகவே இருந்தனர். நிகழ்ச்சியில் இறுதிவரை சென்ற ஐஸ்வர்யா வெற்றி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் யாஷிகா - ஐஸ்வர்யா இடையேயான நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சமூகவலைதளங்களில் அவ்வப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது என ஜாலியாக இருக்கும் தோழிகள் சென்னையை ஆட்டோவில் வலம் வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.‘குத்து விளக்கு குத்துவிளக்கு’ என்ற பாடலுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் தாங்கள் சென்ற ஆட்டோ டிரைவரையும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

Loading...

இதையடுத்து உணவு விடுதிக்குச் சென்ற அவர்கள் சாலையிலேயே தங்களுக்கான அன்பு முத்தத்தை பரிமாறிக் கொண்டனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜெயலலிதா மரணம் - முன்னுக்குப் பின்னாக சாட்சியமளித்த மருத்துவர்கள் - வீடியோ

First published: December 29, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...