பிக்பாஸ்: ஷாக்சிக்கு நடந்த அநியாயத்துக்கு நான்தான் பொறுப்பு - லாஸ்லியா!

ஷாக்சி தன்னை தொடந்து ஏமாற்றி வருவதாகவும் கவின் அவர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

news18
Updated: August 1, 2019, 11:33 AM IST
பிக்பாஸ்: ஷாக்சிக்கு நடந்த அநியாயத்துக்கு நான்தான் பொறுப்பு - லாஸ்லியா!
பிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியா
news18
Updated: August 1, 2019, 11:33 AM IST
பிக்பாஸ் வீட்டில் ஷாக்சிக்கு நடந்த அநியாயத்து நான் தான் பொறுப்பு என்று லாஸ்லியா கூறியுள்ளார்.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.


ஆல்யா மானசா, பவர் ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீரெட்டி, சங்கீதா உள்ளிட்டோர் வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. அதில், எவிக்‌ஷனுக்காக அபிராமி, கவின், மதுமிதா, ரேஷ்மா மற்றும் ஷாக்‌ஷி என 5 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று நிகழ்ச்சிக் குழு புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிக்பாஸ் வீட்டில் ஷாக்சிக்கு நடந்த அநியாயத்து நான் தான் பொறுப்பு என்று கூறிய லாஸ்லியா இனி வீட்டில் உள்ள யாரும் தன்னிடம் பேச வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Loading...



இதனிடையே ஷாக்சி தன்னை தொடந்து ஏமாற்றி வருவதாகவும் கவின் அவர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதனால் குழப்பம் அடைந்த மற்ற போட்டியாளர்கள் ஷாக்சி, கவின், லாஸ்லியா இடையே உள்ள பிரச்னையை அவர்களை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்த வீடியோவில் அறிவுறுத்தியுள்ளனர்.

Also see...

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...