முன்னணி ஹீரோக்கள் படத்தில் மீரா மிதுன்!

news18
Updated: August 14, 2019, 8:30 PM IST
முன்னணி ஹீரோக்கள் படத்தில் மீரா மிதுன்!
நடிகை மீரா மிதுன்
news18
Updated: August 14, 2019, 8:30 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மீராமிதுன் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீராமிதுன். அந்தப் படத்தைத் தொடர்ந்து போதை ஏறி புத்திமாறி படத்தில் நடித்த மீரா, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் இவரது நடவடிக்கைகள் பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்ட போதிலும் தமிழக மக்கள் அறியப்படும் முகமாகவும் மாறினார். சமீபத்தில் இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

மூடர் கூடம் பட இயக்குநர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகும் அக்னி சிறகுகள் படத்தில் நடிக்கும் மீரா மிதுன், சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்திலும் இணைந்துள்ளார். இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். செப்டம்பர் மாதம் இந்தப் படம் திரைக்கு வர உள்ளது.வீடியோ பார்க்க: விஜய்க்கு படத்துக்கு மட்டும் ஏன் பிரச்னை? எஸ்.ஏ.சி.சந்திரசேகர்

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...