யோகி பாபு படத்தில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை!

ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார்.

யோகி பாபு படத்தில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை!
யோகி பாபு
  • News18
  • Last Updated: February 12, 2019, 6:05 PM IST
  • Share this:
யோகி பாபு முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனி ஐயர் இணைந்துள்ளார்.

`கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக இயக்கிவரும் படம் `தர்மபிரபு'. முழுநீள நகைச்சுவை படமாக உருவாகும் இந்தப் படத்தில் யோகி யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார்.

ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.


Dharma Prabhu Tamil Movie

இந்தப் படத்தில் ஒருபாடலுக்கு மட்டும் நடனமாட நடிகை மேக்னா நாயுடு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் தற்போது நடிகை ஜனனி ஐயர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.


அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்... களைக்கட்டிய சவுந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமணம் - வீடியோ

First published: February 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்