EXCLUSIVE அஜித்துக்கு ஆன்மிக நம்பிக்கை அதிகம் - மனம் திறந்த பிக்பாஸ் அபிராமி

EXCLUSIVE அஜித்துக்கு ஆன்மிக நம்பிக்கை அதிகம் - மனம் திறந்த பிக்பாஸ் அபிராமி
  • News18
  • Last Updated: August 29, 2019, 3:14 PM IST
  • Share this:
நடிகர் அஜித்துக்கு ஆன்மிக நம்பிக்கை அதிகம் என்று பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான அபிராமி கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 16 போட்டியாளர்களில் அபிராமியும் ஒருவர். இவர் நேர்கொண்ட பார்வை படத்தில் ஃபமீதா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தாண்டி இந்தப் படம் அவருக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.


அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “மக்கள் மத்தியில் எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 'No means No' என்பது வார்த்தை மட்டும் அல்ல. அது உணர்வு.

அஜித் உடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம். நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். அவருடன் படப்பிடிப்பில் நேரம் செலவழித்தது, உடன் நடித்தது மிகவும் ஸ்பெஷலாக நினைக்கிறேன். வாழ்க்கை முழுவதும் ஞாபகம் வைத்துக் கொள்வேன்.

மற்றவர்களுக்காக எதையும் செய்ய வேண்டியதில்லை; நமக்காக ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என அஜித் அறிவுரை கூறுவார். மிகப்பெரிய இடத்தில் இருந்தாலும், அவர் மிகவும் சாதாரணமாக இருப்பார். எளிமையாக இருப்பார். அவருக்கு ஆன்மிக நம்பிக்கை அதிகம். பாசிடிவ் மனிதர். அந்த குணத்தை அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.

Loading...

நிறைய படங்களில் இருந்து வாய்ப்பு வருகிறது. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென பொறுமையாக கதைகளை கேட்டு வருகிறேன்.

வீடியோ பார்க்க: நண்பரிடம் வழிப்பறி செய்ய வேண்டாம் என தடுத்த அஜீத் ரசிகர் படுகொலை

First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...