Home /News /entertainment /

விபத்தை ஏற்படுத்தி விட்டு எஸ்கேப் ஆன பிக் பாஸ் ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர் - போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்தி விட்டு எஸ்கேப் ஆன பிக் பாஸ் ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர் - போலீஸ் வலைவீச்சு

ஆர்த்தி கணேஷ்கர்

ஆர்த்தி கணேஷ்கர்

நடிகர் கணேஷ்கர் நேற்றிரவு பட்டினப்பாக்கம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பில் மோதியது.

    சாலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிக்கிறார் நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர்.

    குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, சினிமா - சின்னத்திரை என இரண்டிலும் பிரபலமானவர் நடிகை ஆர்த்தி. சின்னத்திரையில் நிறைய காமெடி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், நடுவராகவும் இருந்திருக்கிறார். அதோடு நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டார்.

    ஆர்த்தியின் கணவர் கணேஷ்கரும் சினிமாவில் நிறைய நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சாலையில் உள்ள தடுப்பில் மோதி விட்டு திடீரென தலைமறைவாகி விட்டதாகவும், அவரை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

    நடிகர் கணேஷ்கர் நேற்றிரவு பட்டினப்பாக்கம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பில் மோதியது. அப்போது அவரது காரின் பின்னால் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதாக தெரிகிறது. இதில் பைக்கில் வந்தவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

    வலிமை படத்துக்காக ரத்த காயங்களுடன் அஜித் - வைரலாகும் படங்கள்!

    இதையடுத்து அந்த இடத்திலேயே காரை விட்டுவிட்டு கணேஷ்கர் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரது மனைவி ஆர்த்தி, அவர் வீட்டிற்கு வரவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து மருத்துவமனைகளில் போலீசார் அவரை தேடினர்.

    வேறுபாடுகள் காரணமாக தனுஷ் படத்திலிருந்து விலகுகிறேன் - பாடலாசிரியர் விவேக்

    இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கணேஷ்கரை தேடி வரும் போலீஸார், அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema, TV Serial

    அடுத்த செய்தி