புகைப்பிடிக்கும் அறையால் பிக்பாஸ்க்கு நோட்டீஸ்!

news18
Updated: July 19, 2019, 6:17 PM IST
புகைப்பிடிக்கும் அறையால் பிக்பாஸ்க்கு நோட்டீஸ்!
பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிக்கும் அறை
news18
Updated: July 19, 2019, 6:17 PM IST
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் புகைப்பிடிக்கும் அறையால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

2017-ம் ஆண்டு முதல் தனியார் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த 3 சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெளி உலக தொடர்பின்றி 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கி இருக்க வேண்டும். அதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு போட்டியாளர்கள் தங்க வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்துதரப்படும்.

அதில் போட்டியாளர்கள் புகைப்பிடிப்பதற்காக தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கேமிராக்கள் பொருத்தப்படவில்லை என்றே தெரிகிறது. பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா தொடங்கி புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பல போட்டியாளர்கள் அந்தத் தனி அறையில் புகைப்பிடித்து வருகின்றனர்.


இந்நிலையில் புகையிலை கண்காணிப்புக் குழு பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் புகைப்பிடிக்கும் அறை சட்ட விரோதமானது என்று நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு புகையிலைப் பொருள் கட்டுப்பாடு மக்கள் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்ஸாண்டர் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் சட்டம் 2003-ன் படி யாரும் பொது இடங்களில் புகைப்பிடிக்கக் கூடாது. 30 அறைகள் கொண்ட ஹோட்டல்கள், 30 நபர்கள் அமரக்கூடிய உணவு மையங்கள், விமான நிலையங்கள், ஆகிய இடங்களில் தான் புகைப்பிடிக்க தனியான இடங்கள் ஒதுக்கப்பட முடியும். ஆனால் மற்ற இடங்களில் தனித்த புகைப்பிடிக்கும் அறைகளுக்கு அனுமதியில்லை. இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது. குழந்தைகள் பார்க்கின்றனர். இது அவர்களிடையே ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.

வீடியோ பார்க்க: மழை நீர் சேமிப்பு தொட்டிகளை முறையாக அமையுங்கள் - இயக்குநர் அமீர்

Loading...

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...