ஓவியாவின் தோழியுடன் பிரபல கவர்ச்சி நடிகை... பிக்பாஸ் 3-க்கு வரும் 2 நடிகைகள்...!

news18
Updated: May 23, 2019, 4:47 PM IST
ஓவியாவின் தோழியுடன் பிரபல கவர்ச்சி நடிகை... பிக்பாஸ் 3-க்கு வரும் 2 நடிகைகள்...!
பூனம் பாஜ்வா | ஸ்ரீ கோபிகா
news18
Updated: May 23, 2019, 4:47 PM IST
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இரண்டு நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபலமான பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது விஜய் டிவி நிர்வாகம். இதையடுத்து இந்த முறை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவது யார் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கான விடையை அடுத்தடுத்த நாட்களில் வெளியிட நிகழ்ச்சிக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் இரண்டாவதாக வெளியான புரமோ வீடியோவில் இந்தமுறை 15 போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்பதை கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தப் பட்டியலில் 90 எம்.எல் பட நடிகை ஸ்ரீகோபிகா, நடிகை பூனம் பாஜ்வா ஆகியோரும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிடவில்லை.மேலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது. முதல் சீசன் ஜூன் 25-ம் தேதியும், இரண்டாவது சீசன் ஜூன் 17-ம் தேதியும் துவங்கியதும் குறிப்பிடத்தக்கது.
Loading...
ரசிகர்கள் எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய காஜல் அகர்வால்!

First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...