ப்ளீஸ் என்ன வெளியில் அனுப்பிடுங்க... பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கும் கவின்...!

நிகழ்ச்சிக்குழுவால் வெளியிடப்பட்ட 3 புரோமோ வீடியோக்களிலும் ஷாக்சி மற்றும் கவின் பிரச்னையை பற்றி பேசுவதாகவே உள்ளது.

news18
Updated: August 1, 2019, 4:36 PM IST
ப்ளீஸ் என்ன வெளியில் அனுப்பிடுங்க... பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கும் கவின்...!
பிக்பாஸ் வீட்டில் கவின்
news18
Updated: August 1, 2019, 4:36 PM IST
வீட்டில் இருந்த தன்னை வெளியே அனுப்பிவிடும்படி பிக்பாஸ் போட்டியாளர் கவின் கண்கலங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி 38 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

வீட்டில் இருந்து முதல் ஆளாக பாத்திமாபாபு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா மற்றும் மீரா மிதுன் ஆகியோரும் வெளியேற்றப்பட்டனர்.


Also read... பிக்பாஸ்: ஷாக்சிக்கு நடந்த அநியாயத்துக்கு நான்தான் பொறுப்பு - லாஸ்லியா!

இதையடுத்து வைல்ட் கார்டில் 17-வது போட்டியாளராக உள்ளே செல்ல இருக்கும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் கடந்த 10-நாட்களுக்கு மேலாக கவின், ஷாக்சி, லாஸ்லியாவிற்கு இடையேயான பிரச்னை குறித்தே பேசப்பட்டு வருகிறது.

Loading...

இன்று நிகழ்ச்சிக்குழுவால் வெளியிடப்பட்ட 3 புரோமோ வீடியோக்களிலும் ஷாக்சி மற்றும் கவின் பிரச்னையை பற்றி பேசுவதாகவே உள்ளது.அவ்வாறு தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில், இந்த வீட்டில் நடந்த நிகழ்வால் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வாரம் எவிக்‌ஷனின் வெளியேறவில்லை என்றால் அடுத்த முறை தன்னை நாமினேட் செய்ய வேண்டும் என்றும் மற்ற ஹவுஸ்மெட்களிடம் கவின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Aldso see...

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...