யாரும் காப்பாற்றப்போவதில்லை, இது உங்கள் வாழ்க்கை - ட்விட்டரில் பதிலளித்த ஓவியா..

யாரும்வந்து உங்களைக் காப்பாற்றப்போவதும் இல்லை. இது உங்களின் வாழ்க்கை. திடமாக இருங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

யாரும் காப்பாற்றப்போவதில்லை, இது உங்கள் வாழ்க்கை - ட்விட்டரில் பதிலளித்த ஓவியா..
ஓவியா
  • Share this:
ஊரடங்கு காலத்தில் மனநலனை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்னும் ரசிகரின் கேள்விக்கு, “நான் எந்தவிதமான துன்பத்தில் இருக்கிறோம் என்பதை யாரும் புரிந்துகொள்ளமுடியாது. யாரும்வந்து உங்களைக் காப்பாற்றப்போவதும் இல்லை. இது உங்களின் வாழ்க்கை. திடமாக இருங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் பிரபலமான ஓவியா, ட்விட்டரில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு, வெளிப்படையாக பதிலளித்திருக்கிறார் ஓவியா.சமூகத்தில் நடக்கும் மோசமான விஷயங்களுக்காக குரல் எழுப்ப மாட்டீர்களா என்னும் கேள்விக்கு பதிலளித்திருக்கும் அவர், “ எனக்கு குற்றவாளிகளை தண்டிக்கும் அதிகாரம் இல்லாதவரை நான் பேசமுடியாது. என்னால் நிஜ வாழ்வில் நடிக்க முடியாது” என்று பதிலளித்திருக்கிறார்.

Nepotism என்னும் வாரிசுகளுக்கான அரசியலை எப்படிப் பார்க்கிறீர்கள் என்னும் கேள்விக்கு அரசியல் எல்லா இடத்திலும் இருக்கிறது என்று பதிலளித்திருக்கிறார். மேலும், தற்போது இரண்டு வெப் சீரிஸில் நடித்து வருவதாகவும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading