கல்லூரி நிகழ்ச்சிகளில் அவமானப்பட்டிருக்கிறேன் - பிக் பாஸ் ஜூலி வேதனை
கல்லூரி நிகழ்ச்சிகளில் அவமானப்பட்டிருக்கிறேன் - பிக் பாஸ் ஜூலி வேதனை
பிக்பாஸ் ஜூலி
Big Boss Julie | கல்லூரி நிகழ்ச்சிகளில் அவமானப்பட்டிருப்பதாக திண்டுக்கல்லில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் ஜூலி வேதனை தெரிவித்துள்ளார்.
கல்லூரி நிகழ்ச்சிகளில் அவமானப்பட்டிருக்கிறேன் என்று வேதனையுடன் திண்டுக்கல்லில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசியுள்ளார் பிக்பாஸ் ஜூலி.
திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ளது திரு இருதய கல்லூரி. இந்த கல்லூரியின் ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் வெளிச்சம் கிடைத்து பிக்பாஸ் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ஜுலி இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது, ஜூலி பேசியதாவது, “ஜல்லிக்கட்டு நமது பாரம்பரிய விளையாட்டு. அதற்காக நாம் போராட சென்றோம். ஆனால் அதில் ஒரு உள் அர்த்தம் இருக்கிறது. விலங்குகளை துன்புறுத்துவதால் மாடுகளை சரணாலயத்தில் கொண்டு போய் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே சரணாலயத்தில் உள்ள பல விலங்குகள் காணாமல் போய்விடுகிறது.
அப்படி இருக்கும் போது வீட்டு விலங்குகளாக உள்ள நம்ம மாடுகளை, மாடுகளை நம்பி வாழக்கூடிய நம்மிடமிருந்து பிரித்து சரணாலயத்தில் வைத்துவிட்டால் வெளிநாட்டில் உள்ளவர்கள் பாலும், பால் சார்ந்த பொருட்களையும் அவர்கள் நிர்ணயிக்கிற விலைக்கு அதிகமாக விற்பார்கள்.
நமது நாட்டில் மாடுகள் இருக்கும் போது எதற்கு அடுத்த நாட்டில் போய் பிச்சை எடுக்க வேண்டும். பிக்பாஸ் சீசன் 1ல் நான் கலந்து கொண்டேன். என்னை நெகட்டிவ் ஆகவே வெளிப்படுத்தினர். நான் வெளிப்படையாக சொல்வேன், யாருக்கும் என்னை பிடிக்காது. இதே போல் கல்லூரி நிகழ்ச்சிகளில் அவமானப்பட்டிருக்கிறேன் என்றும் ஜூலி வேதனையுடன் குறிப்பிட்டார்.
- செய்தியாளர்: சங்கர்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.