Home /News /entertainment /

ஏஞ்சல் வந்தாளே.. தமிழில் மீண்டும் நடிக்க வரும் நடிகை பூமிகா!

ஏஞ்சல் வந்தாளே.. தமிழில் மீண்டும் நடிக்க வரும் நடிகை பூமிகா!

பூமிகா

பூமிகா

பூமிகா பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழ் , தெலுங்கு, இந்தி என இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பூமிகா தமிழில் மீண்டும் கம்பேக் கொடுக்கிறார். 

    தமிழ் சினிமா ரசிகர்கள் சில குறிப்பிட்ட ஹீரோயின்களை அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். அவர்கள் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட அவர்கள் எப்போது வந்தாலும் சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்க காத்திருப்பார்கள். அந்த வரிசையில் விஜய், ஸ்ரீகாந்த், சூர்யாவுடன் நடித்து மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தவர் நடிகை பூமிகா.

    சின்னத்திரையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி சோபியா என்ட்ரி!

    தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்க வந்தார். அண்ணி, அக்கா என குணச்சித்திர வேடங்களில் நடித்தார். நானியின் MCA  என்ற படத்தில் நானியின் அண்ணியாக நடித்து இருந்தார்.

    மேடையில் திடீரென்று பெயரை சொல்லி கூப்பிட்ட விக்ரம்.. ஷாக்காகி போன விஜே அஞ்சனா!

    இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பூமிகா தமிழில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து நடிக்கிறார்.  தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் 30-வது படத்தில் அவருக்கு சகோதரியாக நடிக்க பூமிகா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Actor Jayam Ravi, Kollywood, Tamil Cinema

    அடுத்த செய்தி