ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சொன்ன வாக்கை காப்பாற்றியவர் பாரதிராஜா… கமலின் சுவாரசியமான ட்விட்டர் பதிவு வைரல்

சொன்ன வாக்கை காப்பாற்றியவர் பாரதிராஜா… கமலின் சுவாரசியமான ட்விட்டர் பதிவு வைரல்

கமல் - பாரதி ராஜா

கமல் - பாரதி ராஜா

மருத்துவமனையில் அவரை சந்திக்க சென்றபோது, ஆஸ்பத்திரியில் உங்களை பார்க்க எனக்கு பிடிக்கவில்லை. சீக்கிரம் வீடு திரும்புங்கள் என்று கூறி புறப்பட்டேன். – கமல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குனர் பாரதிராஜா குறித்து நடிகர் கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவு கவனம் ஈர்த்து வருகிறது.

இயக்குனர் பாரதிராஜா குணமடைந்து வீடு திரும்பிய செய்தியை தன்னுடன் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா உடல்நலவு குறைவு காரணமாக கடந்த மாதம் 21ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி இல்லம் திரும்பினார்.

அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின் பாரதிராஜா, சிறுநீரக குழாயில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தின் வெளியீடு தள்ளிச் சென்றது…

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் பாரதிராஜா.  இதைத்தொடர்ந்து இன்று நடிகர் கமல்ஹாசனுக்கு தொலைபேசி வாயிலாக தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன்,  இயக்குனர் பாரதிராஜா பூரண நலம் பெற்று திரும்பிய மகிழ்ச்சியான செய்தியை தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டார்.

இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணன் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்…

மருத்துவமனையில் அவரை சந்திக்க சென்றபோது,  ஆஸ்பத்திரியில் உங்களை பார்க்க எனக்கு பிடிக்கவில்லை. சீக்கிரம் வீடு திரும்புங்கள் என்று கூறி புறப்பட்டேன்.

அதற்கு அவர் ஆங்கிலத்தில் நிச்சயமாக என்று தெரிவித்தார். சொன்ன வார்த்தையை காப்பாற்றிய தேனிக்காரருக்கு இந்த பரமக்குடியானின் வாழ்த்துக்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அம்மா கிரியேஷன் சிவா, எஸ்.ஆர்.பிரபு, லலித் குமார், தனஞ்ஜெயன் உள்ளிட்டோரும் இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Published by:Musthak
First published:

Tags: Kamal Haasan