திருமணம் செய்துகொள்... நடிகையை துப்பாக்கி முனையில் மிரட்டிய நபர் கைது

திருமணம் செய்துகொள்... நடிகையை துப்பாக்கி முனையில் மிரட்டிய நபர் கைது
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: May 26, 2019, 5:13 PM IST
  • Share this:
தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நடிகையை துப்பாக்கி முனையில் மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரபல போஜ்புரி நடிகை ரிது சிங். இவர் தற்போது துலாரி பிடியா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்கன்ச் நகரில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடிகை ரிது சிங் தங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் தங்கியிருந்த விடுதியின் அறையில் இரவு 11 மணிக்கு இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்று தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டியுள்ளார். துப்பாக்கியுடன் அந்த இளைஞரைக் கண்ட நடிகை ர்து சிங் பயத்தில் அலறியுள்ளார். அவரது சத்தம் வெளியில் கேட்கவே அந்த அறையை நோக்கி அசோக் என்பவர் வந்துள்ளார்.


அசோக்கை பார்த்த அந்த நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து அசோக் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் பாட்டீல் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி துப்பாக்கியை ஒப்படைக்குமாறு கூறியுள்ளார்.

ஆனால் அதை செவிமடுக்காத அந்த நபர் எஸ்.பியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் அதிலிருந்து காவல்துறை கண்காணிப்பாளர் தப்பினார்.
இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெயர் பங்கஜ் யாதவ் என்பதும், நீண்ட நாட்களாக நடிகை ரிது சிங்கை பின் தொடர்ந்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் அவர் ரிது சிங்கை திருமணம் செய்துகொள்ள வேண்டி அடம்பிடித்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க: பிரபல நடிகையை திருமணம் செய்யுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டிய இளைஞர்!

First published: May 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading