Home /News /entertainment /

அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல் - நடிகை அமலா பால் புகார்.. தயாரிப்பாளர் கைது

அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல் - நடிகை அமலா பால் புகார்.. தயாரிப்பாளர் கைது

அமலா பால் - பவ்நிந்தர் சிங்

அமலா பால் - பவ்நிந்தர் சிங்

இருவரும் தங்கி இருந்த போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டியதாகவும் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தனது அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என ஆண் நண்பர் மிரட்டுவதாக நடிகை அமலாபால் போலீசாரிடம் பகீர் புகார் அளித்துள்ளார். அமலாபாலின் முன்னாள் நண்பர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் பின்னணி என்ன என்பது குறித்து இங்கே பதிவிடுகிறோம்.

    தமிழில் மைனா திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். பல மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் தற்போது வெப்சீரிஸ்களிலும் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகை அமலா பாலுக்கு அவரது நண்பர் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்ததாக பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் அமலா பாலும் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல பாடகர் பவ்நிந்தர் சிங்கும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

    பவ்னிந்தர் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அமலா பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வைரலானது. 2020 ஆம் ஆண்டு மார்ச் 20-ஆம் தேதி பவ்நிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அமலா பாலுடன் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

    இதனால் அமலா பாலுக்கு இரண்டாம் திருமணம் நடைபெற்று விட்டது என்று இணையதளத்திலும் செய்திகள் பரவின. ஆனால், அந்த பதிவினை ஒரு சில மணி நேரத்திலேயே பவ்நிந்தர் சிங் நீக்கி விட்டார். இந்த நிலையில் தான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று அமலா பால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அந்த நபருடன் கேஷுவலாக எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுகிறார் என்றும் அமலா பால் அப்போதே பரபரப்பை கிளப்பி இருந்தார்.

    இதுகுறித்து நடிகை அமலா பால் பவ்நிந்தர் மீது, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அந்த மனுவில் முன்னாள் நணபர் பவ்னிந்தர் சிங் தன்னுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலா பாலின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட பவ்னீந்தர் சிங்குக்கு தடை விதித்ததுடன், அவர் மீது சிவில் அவதூறு வழக்கு தொடரவும் அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தான் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அமலா பால் பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே தனக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்தபோது பவ்னிந்தர் சிங் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

    இருவரும் தங்கி இருந்த போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டியதாகவும் புகாரில் குற்றம்சாட்டியுள்ளார். திரைப்பட தொழிலில் ஏற்பட்ட நட்பு காரணமாக பவ்நிந்தர் சிங்குடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கியுள்ளனர்.

    பின்னர் 2018-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் பெரிய முதலியார் சாவடியில் தங்கியிருந்த போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால் அதன் பிறகு இருவரும் நெருக்கமாக பழகிய போது எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடப் போவதாக மிரட்டுவதாக அமலாபால் தனது குற்றச்சாட்டில் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தன்னை அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்து தனது பணம் மற்றும் சொத்துக்களை மோசடி செய்துவிட்டதாக பவ்நிந்தர் சிங் தத் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது நடிகை அமலாபால் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார்.

    பிரார்த்தனைகளுக்கு சக்தி உண்டு... மருத்துவமனையில் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா சரத்குமார்

    இப்புகாரின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடந்தி வந்த நிலையில் பெரிய முதலியார் சாவடியில் தங்கி இருந்த நடிகை அமலாபாலின் ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங் தத்தை செவ்வாய் காலை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது 16 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட பவ்நிந்தர் சிங் தத்தை ரகசிய இடத்தில் வைத்து விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Amala paul

    அடுத்த செய்தி