பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கும் முதல் படம் பற்றிய அறிவிப்பு

நடிகர் மனோஜ்

பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் இயக்குநர் அவதாரம் எடுக்க இருக்கிறார்.

  • Share this:
தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கும் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். தனது தந்தை இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

பின்னர் நடிப்பிலிருந்து விலகிய மனோஜ், இயக்குநர் ஷங்கர், மணிரத்னம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து தனது புதிய படத்துக்கான கதை அமைக்கும் பணிகளிலும் மனோஜ் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ படத்தை மனோஜ் இயக்க இருப்பதாக தகவகல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது மனோஜ் இயக்குநராக அறிமுகமாவுள்ளது உறுதியாகியுள்ளது. ரவீந்தர் சந்திரசேகரன் தனது லிப்ரா புரொடக்‌ஷன் மூலமாக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.ஆனால் இத்திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகமா அல்லது வேறு ஏதேனும் கதையா என்பதை படக்குழு சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது. மேலும் இத்திரைப்பத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

 

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: