சினிமா படப்பிடிப்பு, திரையரங்குகள் திறப்புக்கு அனுமதி வேண்டும் - முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்

திரையரங்குகளை திறக்கவும், சினிமா படப்பிடிப்பு அனுமதி வழங்க கோரியும் தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் வைத்துள்ளார்.

சினிமா படப்பிடிப்பு, திரையரங்குகள் திறப்புக்கு அனுமதி வேண்டும் - முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்
இயக்குநர் பாரதிராஜா
  • Share this:
திரையரங்குகளை திறக்கவும், சினிமா படப்பிடிப்பு அனுமதி வழங்க கோரியும் தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.

விதிகள் தளர்த்தி சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் கொண்ட குழு கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. நன்றிகள். அதேசமயம் சினிமாவும் முடங்கிப்போய் கிடக்கிறது. திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் அடுத்த நிலை என்ன எனத் திணறி வருகிறோம்.


பலர் உணவுக்கே வழியின்றி சிரமப்படுகிறார்கள். முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாது திகைக்கின்றனர். பணம் கொடுத்தவர்களும் போட்ட பணத்திற்கான வரவு வழி தெரியாததால் நஷ்டப்பட்டுப் போய் உள்ளனர். சினிமாவை நசிந்துவிடாமல் காக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

முதல்வர் தயைகூர்ந்து சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுத்துள்ளதைப் போன்ற ஒரு அனுமதியை சினிமாவுக்கும் படப்பிடிப்பைத் தொடங்க கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசு வரையறுக்கும் கட்டுப்பாடு , பாதுகாப்பு முறைகளுடன் இயங்குவோம் என உறுதியளிக்கிறோம். இதன்மூலம் சிறுபடங்கள் படப்பிடிப்பிற்குச் செல்ல ஏதுவாக அமையும்.

திரையரங்குகளும் தங்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி திறந்து செயல்பட திரையுலகினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க: 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த தமிழக அரசு அனுமதி

பார்க்க : நடிகை பாவனாவின் ரீசண்ட் கிளிக்ஸ்...!
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading