முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிரார்த்தனைகளுக்கு சக்தி உண்டு... மருத்துவமனையில் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா சரத்குமார்

பிரார்த்தனைகளுக்கு சக்தி உண்டு... மருத்துவமனையில் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா சரத்குமார்

ராதிகா - பாரதிராஜா

ராதிகா - பாரதிராஜா

இன்று இயக்குநர் பாரதிராஜாவை நடிகை ராதிகா சரத்குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் பாரதிராஜா நலம் பெற்று வருவதாக நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜாவிற்கு கடந்த வாரம் மயக்கம் ஏற்பட்டது. மதுரை விமான நிலையத்தில் மயக்கம் ஏற்பட்டதால், மதுரையிலேயே ஒரு நாள் தங்கி விட்டு சென்னை திரும்பினார்.

அதன் பின் தன்னுடைய நீலாங்கரை இல்லத்தில் ஓய்வெடுத்த அவர், பின்பு சென்னையில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருநங்கைகளுக்காக அனிதா சம்பத் செய்த விஷயம்... பாராட்டும் நெட்டிசன்கள்!

இந்நிலையில் இன்று இயக்குநர் பாரதிராஜாவை நடிகை ராதிகா சரத்குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பிரார்த்தனைகளுக்கு சக்தியும் நல்ல வைப்ரேஷன்களும் உள்ளன. இன்று எனது இயக்குனரைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர் குணமடையும் பாதையில் இருக்கிறார். எப்போதும் நான் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைப் பார்க்க சகிக்கவில்லை. பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையின் கவனிப்புக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Director bharathiraja, Radhika sarathkumar