போட்டியின்றி இயக்குநர் சங்கத் தலைவரானார் பாரதிராஜா!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் தமது சீடரான பாக்யராஜ் வெற்றி பெற வேண்டும் என்றும் பாரதிராஜா தெரிவித்தார்.

news18
Updated: June 11, 2019, 12:23 PM IST
போட்டியின்றி இயக்குநர் சங்கத் தலைவரானார் பாரதிராஜா!
இயக்குனர் பாரதிராஜா
news18
Updated: June 11, 2019, 12:23 PM IST
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக இருக்கும் விக்ரமனின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் சென்னை வடபழனியில் திரைப்பட இயக்குநர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

Also read... நடிகர் சங்கத் தேர்தல்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை!

இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.செல்வமணி, பாக்யராஜ், விக்ரமன், பேரரசு உள்பட ஏராளமான இயக்குநர்கள் கலந்துக்கொண்டனர். கூட்டத்தின் முடிவில், புதிய தலைவராக பாரதிராஜாவை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், பாரதிராஜா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிராஜா, இயக்குநர் சங்கத் தலைவராக தன்னை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் தமது சீடரான பாக்யராஜ் வெற்றி பெற வேண்டும் என்றும் பாரதிராஜா தெரிவித்தார்.

Also see...

First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...