தனுஷின் 44 படத்தில் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகா அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்துவந்த தனுஷ் அடுத்து மித்ரன் ஆர் . ஜவஹர் இயக்கத்தில் நடிக்கிறார் . இவர் ஏற்கனவே தனுஷை வைத்து யாராடி நீ மோகினி , குட்டி , உத்தமபுத்திரன் படங்களை இயக்கியவர் . செல்வராகவனின் முன்னாள் அசிஸ்டெண்ட் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் தனுஷின் 44 வது படம் என்பதால் D44 என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது . இதில் தனுஷுடன் முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்கிறார் . படத்தில் இரண்டு நாயகிகள் . ராஷி கண்ணா , ப்ரியா பவானி சங்கர் . அத்துடன் முக்கிய வேடம் ஒன்றில் நித்யா மேனனும் நடிப்பதாக கூறப்படுகிறது . இன்னொரு முக்கிய நடிகர் , பிரகாஷ்ராஜ் .
Also read... எஸ்.பி.பி. மறைவுக்குப் பின்... எஸ்.பி.பி.சரணின் உருக்கமான ஸ்டேட்மெண்ட்!
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது . இதன் மூலம் ரஜினி , விஜய் , சூர்யா , தனுஷ் ஆகியோரின் படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கும் ஒரே நிறுவனம் என்ற பெருமை சன் பிக்சர்ஸுக்கு கிடைத்துள்ளது . இதன் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது . Published by: Vinothini Aandisamy
First published: August 04, 2021, 16:13 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.