ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' பட ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த பாரதிராஜா

தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' பட ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்த பாரதிராஜா

பாரதிராஜா - யோகி பாபு

பாரதிராஜா - யோகி பாபு

தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தின் படப்பிடிப்பில் பாரதிராஜா கலந்து கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என கொண்டாடப்படும் பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார். அவர் தங்கர்பச்சான் இயக்கத்தில் 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக பாரதிராஜாவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று உடல் நலம் தேறிய பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் தங்கர்பச்சான் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டுள்ளார். இவருக்காக அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 130 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பாரதிராஜாவும் யோகிபாபுவும் பங்குபெறும் காட்சி படமாக்கப்பட்டது.

பாரதிராஜா தனுஷ் உடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது. அதன் உற்சாகத்தில் இருந்த சமயத்தில் தான் அவருக்கு உடல்நலவுக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார் பாரதிராஜா.

First published:

Tags: Bharathiraja, Yogi babu