முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விடுதலை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் முதலில் நடிக்கவிருந்தது இவரா? - வெற்றிமாறன் சொன்ன சீக்ரெட்

விடுதலை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் முதலில் நடிக்கவிருந்தது இவரா? - வெற்றிமாறன் சொன்ன சீக்ரெட்

வெற்றிமாறன் - விஜய் சேதுபதி

வெற்றிமாறன் - விஜய் சேதுபதி

உடனடியாக விஜய்சேதுபதியிடம் போன் பண்ணி வாத்தியார் ரோல் பத்தி சொன்னேன். ஓகே சார் நான் பண்றேன் எவ்வளவு நாள் வேணும் என கேட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ள விடுதலை முதல் பாகம் வருகிற 31 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன், ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, வெற்றிமாறன் மிக முக்கிய இயக்குநர் என்றும் 1500 படங்களுக்கு இசையமைத்ததற்கு பிறகு இதனை கூறுகிறேன் என்றும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நிகழ்வில் பேசிய வெற்றிமாறன் சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, ''விஜய் சேதுபதி ரோலுக்கு முதன்முதலில் பாரதிராஜா தான் பண்றதா இருந்தது. லொகேஷன் பார்த்துட்டுவந்த பிறகு பாரதிராஜாவிடம் சார் கண்டிப்பாக அங்க வந்து உங்களால பண்ண முடியாது என்றேன் அவர் என் மேல் கோபப்பட்டார். அதுக்கு அப்றோம் எனக்கு ஒரே ஆப்சன் தான் வந்தது. அமீரும் நானும் பேசுனோம். உடனடியாக விஜய் சேதுபதியிடம் போன் பண்ணி வாத்தியார் ரோல் பத்தி சொன்னேன். ஓகே சார் நான் பண்றேன் எவ்வளவு நாள் வேணும் என கேட்டார். 8 நாள் போதும் என்றேன்.

மலை மேல ஏறி நாங்க போனபோது அங்க எனக்கு எப்படி படம் எடுப்பது என தெரியவில்லை. அது எடுக்க தெரிஞ்சிக்கிறதுக்கே 15 நாள் ஆகிடுச்சு. என்ன பண்ணனும்னு தெரியல. விஜய் சேதுபதி நடிக்க வைத்தபோது அவரது வேடம் வளர்ந்துகிட்டே இருந்தது. அவரை வைத்து 65 நாள் படப்பிடிப்பு நடத்தினோம்'' என்று பேசினார்.

First published:

Tags: Actor Vijay Sethupathi, Director vetrimaran