ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Miral Movie Review : பரத் – வாணிபோஜன் நடித்துள்ள 'மிரள்' படத்தின் விமர்சனம்…

Miral Movie Review : பரத் – வாணிபோஜன் நடித்துள்ள 'மிரள்' படத்தின் விமர்சனம்…

மிரள் படத்தின் போஸ்டர்

மிரள் படத்தின் போஸ்டர்

ஒரு நாள் தன் கணவரையும், தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்வது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பரத் நடிப்பில் மிரள் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அந்த படம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்குமா என்பதை பார்க்கலாம்.

பரத், வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார்,  ராஜ்குமார் உள்ளிட்டோர்  நடிப்பில் சக்திவேல் என்பவர் இயக்கி இருக்கும் திரைப்படம் மிரள். குடும்பப் பின்னணியில் ஹாரர் கலந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

காதல் திருமணம் செய்து கொண்டு பரத் -  வாணி போஜன் ஆகியோர் மகனுடன் வாழ்ந்து வருகின்றனர்.  ஒரு நாள் தன் கணவரையும்,  தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்வது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது.  மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் அவர்கள் மூவரும் குலதெய்வம் வழிபாட்டிற்காக சொந்த ஊர் புறப்படுகின்றனர்.  அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மிரள் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். குலதெய்வ வழிபாடு முடிந்து தொழில் காரணமாக இல்லம் திரும்ப பரத் முடிவெடுக்கிறார்.

திரையரங்கில் இன்று வெளியானது சமந்தாவின் ’யசோதா’ : படம் எப்படி இருக்கு?

குடும்பத்துடன் அந்த ஊரில் இருந்து புறப்பட்ட பின், ஒரு காட்டில் மாட்டிக் கொள்கின்றனர்.  அவர்கள் மூவரையும் வாணிபோஜன் கனவில்  வந்த மர்ம நபர் கொல்ல முயற்சிக்கிறார். அது யார்? எதற்காக பரத் குடும்பத்தை கொல்ல நினைக்கிறார்? என்பதை ஹாரர் திரைக்கதை மூலம் கூற முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் சக்திவேல்.

' isDesktop="true" id="835186" youtubeid="H1sYpgFNqrc" category="cinema">

இந்தப் படத்தின் தொடக்கம் நல்ல வகையிலேயே அமைந்துள்ளது.  குறைந்த நபர்கள்,  அவர்களை சுற்றி நடக்கும் மர்மங்கள் என முதல் பாதி நகர்கிறது.  ஆனால் இரண்டாம் பாதியில் கதையை நகர்த்திய விதம் சற்று தொய்வை கொடுக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில், நடு இரவில் தன் குடும்பத்துடன் மாட்டிக் கொண்டு தவிக்கும் பரத் பேசும் வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கவில்லை. ஒரே வசனத்தை மீண்டும் மீண்டும் பேசுவது போல உள்ளது.

கதர் ஆடையில் கமல் ஹாசன்... கவனம் பெறும் லேட்டஸ்ட் படங்கள்!

மிரள் படத்திற்காக இயக்குனர் எடுத்துக்கொண்ட கதை வித்தியாசமாகவே உள்ளது. ஆனால் அதை திரைக்கதையாக கையாண்டதில் சற்று தடுமாற்றம் தெரிகிறது.  இந்த படத்தின் கதைக்கு இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் படம் பார்ப்பவர்களுக்கு மிரளாக இருந்திருக்கும்.

இதில் நடித்த பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரின் நடிப்பு நன்றாக உள்ளது. மிரள் திரைப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் பார்ப்பவர்களை பயமுறுத்தும். ஆனால் அந்த பயம் படம் நெடுகிலும் இடம்பெறாமல் போனது படத்தின் பலவீனம். இருந்தாலும் இதில் வரும் திகில் சம்பவங்கள் ஏன் நடந்தன என்பதை ஒரு மெசேஜ் சொல்லி முடித்துள்ளார் இயக்குனர். இந்தப் படம் சிலரை கவரலாம், சிலரை கடுப்பாக்கலாம்.

Published by:Musthak
First published:

Tags: Kollywood