எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - ஆந்திர முதல்வர் பிரதமருக்கு கடிதம்

எஸ்.பி.பி | ஜெகன்மோகன் ரெட்டி

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 • Share this:
  தனது வசீகரக் குரலால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 26-ம் தேதி வெள்ளிக்கிழமை காலமானார்.  அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், திரைத்துறையினர், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

  இந்நிலையில் ஆகஸ்ட் 27-ம் தேதி எஸ்.பி.பியின் உடல் தமிழக காவல்துறையின் மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் இருக்கும் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

  படிக்க: அப்பா இறுதிச் சடங்கிற்கு அஜித் வருவதும் வராததும் பிரச்னை இல்லை - எஸ்.பி.பி.சரண் ஆதங்கம்

  எஸ்.பி.பி பெயரில் தேசிய விருது வழங்க வேண்டும், தாதே சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும், என திரையுலகினர் பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எஸ்.பி.பிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  படிக்க: டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு எஸ்.பி.பி போட்ட நெகிழவைக்கும் நிபந்தனை: தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்.

  அக்கடிதத்தில், எஸ்.பி.பி தெலுங்கு மொழியில் பாடியதற்காக ஆந்திர அரசின் நந்தி விருதை 25 முறையும், தமிழக கர்நாடக அரசுகளின் விருதுகளையும் வென்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஜெகன்மோகன் இசைக் கலைஞர்கள் லதா மங்கேஷ்கர், சுப்புலட்சுமி, பிஸ்மில்லா கான் ஆகியோர் வரிசையில் எஸ்.பி.பி.யையும் கவுரவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.  இதேபோல் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: