பிப்ரவரி 27 தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறுகிறது. செல்வமணி தலைமையில் ஒரு அணியும், பாக்யராஜ் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிடுகின்றன. அரசியல் கட்சிகளைவிட மிகவும் சூடாகவும் பரஸ்பர குற்றச்சாட்டுகளுடனும் இயக்குனர்கள் சங்கத்திற்கான தேர்தல் பரப்புரை நடந்து வருகிறது.
தங்களது அணியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் பேசிய பாக்யராஜ் செல்வமணியை விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திறந்த மடல் ஒன்றை பாக்யராஜுக்கு செல்வமணி அணியினர் எழுதியிருந்தனர். இந்நிலையில் மீண்டும் செல்வமணி மீது குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருக்கிறார் பாக்யராஜ்.
விஜயை வைத்து முருகதாஸ் சர்கார் திரைப்படம் எடுத்த போது அந்தப் படம் கதைத் திருட்டு பிரச்சனையில் சிக்கியது. உதவி இயக்குனர் ஒருவர் அது நான் பதிவு செய்திருந்த கதை என்று பிரச்சினையைக் கிளப்பினார். இந்த விவகாரத்தில் உதவி இயக்குனரின் பக்கம் நின்ற பாக்யராஜ் இரண்டு கதையிலும் முக்கியமான ஒன்லைன் ஒன்றுதான் எனக் கூறி அவருக்கு படத்தின் டைட்டிலில் பெயரும் அங்கீகாரமும் கிடைக்கச் செய்தார்.
இந்த பிரச்சனையின் போது ஆர்கே செல்வமணி இரண்டு கதையும் வேறு வேறு என்று கூறியதாகவும், அந்த பிரச்சனையில் அவர் போர்ஜரி செய்ததாகவும் தற்போது பாக்யராஜ் குற்றம்சாட்டியுள்ளார். எழுத்தாளர் சங்கத்தில் இல்லாத செல்வமணியால் அந்த சங்கத்திலேயே போர்ஜரி செய்யமுடியும் என்றால் அவர் இயக்குனர் சங்க தலைவர் ஆனார் என்னென்ன செய்வார் என்று பாக்யராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also read... விஜய்யின் கார் இன்சூரன்ஸ் குறித்த அவதூறுக்கு ஆதாரத்துடன் பதிலடி
ஆனால் சர்கார் கதை பிரச்சினையில் எந்த விதத்தில் அவர் போர்ஜரி செய்தார், அதை எப்படி எழுத்தாளர் சங்கத்தில் உள்ளவர்கள் அனுமதித்தார்கள் என்பதை குறித்து பாக்யராஜ் எதுவும் கூறவில்லை. செல்வமணி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என திரையுலகம் ஆவலாக காத்திருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bhagyaraj, Sarkar movie