பகவத்கீதை சர்ச்சை: சமூக விரோதிகளின் அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்சேதுபதி

சமீபத்தில் தேசாபிமானி பத்திரிகைக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி, “நான் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மிகப்பெரிய ரசிகன். சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயனின் முடிவு சரிதான் என்று கூறியிருந்தார்.

news18
Updated: February 12, 2019, 12:13 PM IST
பகவத்கீதை சர்ச்சை: சமூக விரோதிகளின் அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி
news18
Updated: February 12, 2019, 12:13 PM IST
பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன் என்று கூறி தன் மீதான வதந்திக்கு நடிகர் விஜய் சேதுபதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பகவத்கீதை ஒன்றும் புனிதநூல் கிடையாது. இன்றைய சீரழிவுக்கு இதுபோன்ற கற்பனையால் உருவாக்கப்பட்ட நூல்களே காரணம் என்று விஜய் சேதுபதி பேசியதாக சமூகவலைதளங்களில் போஸ்டர் வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்து தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, “என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன்.

சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்” என்று கூறியுள்ளார்.சமீபத்தில் தேசாபிமானி பத்திரிகைக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி, “நான் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மிகப்பெரிய ரசிகன். சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயனின் முடிவு சரிதான். இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு பிரச்னைகள் வருகிறது என்று தெரியவில்லை.

ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் கல்வியில் முன்னேற்றமும், காதல் திருமணம் செய்வதும்தான் சிறந்த வழி. சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வரின் முடிவு சரிதான் என்று பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் இடையே எப்படிப்பட்ட உறவு வேண்டும் - வசந்தபாலன் பேட்டி - வீடியோ

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...