ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மூவி டைம் : பக்கா த்ரில்லர்! ஒவ்வொரு சீனும் அல்லு விடும்! அலறவிடும் Fall மூவி!

மூவி டைம் : பக்கா த்ரில்லர்! ஒவ்வொரு சீனும் அல்லு விடும்! அலறவிடும் Fall மூவி!

ஃபால் திரைப்படம்

ஃபால் திரைப்படம்

உங்களுக்கு த்ரில்லர் வகை படம் இஷ்டம் என்றால் நீங்கள் கண்டிப்பாக மிஸ் செய்யக்கூடாத திரைப்படம் Fall.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மூவி டைம்

த்ரில்லர் வகை படங்களை தேடித்தேடி பார்க்கும் ஆளா நீங்கள்? பேயில்லை, பிசாசில்லை ஆனால் உங்களை கதிகலங்க வைக்கும் ஒரு படத்தைத்தான் இன்றைய மூவி டைமில் நாம் பார்க்க போகிறோம்.

Fall:

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஆங்கிலத்திரைப்படம்தான் Fall. ஸ்கார் மேன் இயக்கிய இந்த திரைப்படம் 1 மணி நேரம் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய த்ரில்லர் வகை மூவி. த்ரில்லர் என்றாலே பேய்தானா என்று போரடித்த ரசிகர்களுக்காவே எடுக்கப்பட்ட சீட் எட்ஜ் வகை படம் இது.

ஸ்பாய்லர் இல்லாத கதை இதுதான்!

இந்தப்படத்தில் ட்விஸ்ட் என்று பெரிய கதையெல்லாம் இல்லை. அதனால் ஸ்பாய்லர் பயம் வேண்டாம் . மலையேறும் வழக்கம் கொண்டு 2 தோழிகள் பயன்பாட்டில் இல்லாத, பழைய செல்போன் டவர் ஒன்றில் ஏறுகின்றனர். டவர் என்றால் 50, 100 அடியல்ல. 2000 அடி உயரம் கொண்ட இரும்பு டவர். ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு ஹைவே பக்கத்தில் பயன்பாடாற்று கிடக்கும் அந்த டவரில் ஏறியபிறகு டவரின் ஏணி சுக்குநூறாய் நொறுங்குகிறது. இருவர் மட்டுமே அமரும் இடவசதி கொண்ட டவரின் உச்சியில் மாட்டிக்கொள்ளும் இருவரும் இறங்குவதற்கு என்ன செய்தார்கள்? உச்சியில் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தை என்ன என்பதை பக்கா த்ரில்லராக கொடுத்திருக்கிறார் இயக்குநர். படத்தை பார்க்கும் நாமக்கும் டவர் உச்சியில் மாட்டுக்கொண்டது போல உணர்வைக் கடத்திவிடுவதே இயக்குநரின் வெற்றி. கேமரா, இசை, இரண்டு நடிகர்களின் நடிப்பு என படம் பக்காவான மூவி மேட்டீரியல். படத்தின் அதிக காட்சிகள் 2 நடிகர்களையும், ஒரு டவரையும் சுற்றியே நடக்கிறது. ஆனால் துளியும் போர் அடிக்காமல் நொடிக்கு நொடிக்கு பரபரப்பை கொடுத்து காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர் ஸ்கார். செலவே இல்லாமல் இப்படியும் ஒரு படம் எடுக்கலாம் என வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர்.

இதையும் படிங்க: கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாக நடிக்கும் யோகிபாபு… பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

உங்களுக்கு த்ரில்லர் வகை படம் இஷ்டம் என்றால் நீங்கள் கண்டிப்பாக மிஸ் செய்யகூடாத திரைப்படம் Fall. அதே நேரத்தில் உயரம் என்றாலே பயம் என்பவர்களும், இதயநோய், கர்ப்பிணிகள், குழந்தைகள் கண்டிப்பாக இந்தப்படத்தை பார்க்கவே வேண்டாம். திடீர் திடீரென கொடுக்கப்படும் ஷாக்கும் படம்போகும் போக்கும் வீக்கானவர்களை நிச்சயம் அலறடித்துவிடும். இந்தப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன நிலையில் ஓடிடி விவரம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

Published by:Murugadoss C
First published:

Tags: Movie review