முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சூரரைப் போற்று படத்திற்காக ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது அறிவிப்பு

சூரரைப் போற்று படத்திற்காக ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது அறிவிப்பு

ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ்

Best Music Director : சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்து தயாரித்த சூரரைப்போற்று திரைப்படம், நேரடியாக அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

  • 1-MIN READ
  • Last Updated :

சூரரைப்போற்று படத்தில் பணியாற்றிய  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் திரைத் துறையில் பல்வேறு பிரிவுகளுக்கு விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இந்தியாவிலேயே சினிமா படங்கள் எடுப்பதற்கு உகந்த மாநிலமாக, மத்திய பிரதேசத்தை தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர். சிறந்த தமிழ் படமாக, வசந்த் இயக்கத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவந்த ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் அறிவிக்கப்பட்டது.

National Awards 2022: நாம ஜெயிச்சிட்டோம் மாறா... 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப்போற்று!

இந்நிலையில் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு சூரரைப்போற்று திரைப்படத்திற்காக வழங்கப்படும் என தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர். இது சூர்யா மற்றும் ஜி.வி. பிரகாஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்து தயாரித்த சூரரைப்போற்று திரைப்படம், நேரடியாக அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளிவந்து மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் வெற்றிக்கு ஜி.வி. பிரகாஷின் இசையில் வெளிவந்த பாடல்களும், பின்னணி இசையும் முக்கிய பங்காற்றின.

தமிழில் மாபெரும் வெற்றியை பெற்ற சூரரைப்போற்று திரைப்படம் தற்போது இந்தியில் உருவாகி வருகிறது. இதில் நடிகர் அக்சய் குமார் சூர்யா கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூரரை போற்று படத்திற்கு ஐந்து பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: GV prakash, National Film Awards