முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இசைக் கலைஞர்களின் ஆஸ்கர் - கிராமி விருது வென்ற பெங்களூருவைச் சேர்ந்த ரிக்கி கேஜ்

இசைக் கலைஞர்களின் ஆஸ்கர் - கிராமி விருது வென்ற பெங்களூருவைச் சேர்ந்த ரிக்கி கேஜ்

ரிக்கி கேஜ்

ரிக்கி கேஜ்

கடந்தாண்டு வெளியிடப்பட்ட டிவைன் டைட்ஸ் என்ற பாடலுக்கு நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் 2வது கிராமி விருது கிடைத்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். இசைக்கலைஞர்களின் ஆஸ்கர் என்று போற்றப்படும் கிராமி விருதுகளை, இதுவரை பண்டிட் ரவிசங்கர், ஜாகிர் ஹுசைன், விக்கு விநாயகராம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இந்தியர்கள் வென்றிருக்கின்றனர்.

இவர்களது வரிசையில் தற்போது பெங்களூருவைச் சேர்ந்த ரிக்கி கேஜ் மூன்றாவது முறையாக கிராமி விருதை வென்றுள்ளார். இந்துஸ்தானி இசை மீது தீராத காதல் கொண்ட ரிக்கி, 2015ம் ஆண்டு வெளியிட்ட 'விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா' பாடலுக்கு முதல் முறை கிராமி விருது பெற்றார்.

பின்னர் கடந்தாண்டு வெளியிடப்பட்ட டிவைன் டைட்ஸ் என்ற பாடலுக்கு நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் 2வது கிராமி விருது கிடைத்தது. இந்நிலையில் அதே பாடலுக்கு சிறந்த இம்மெர்சிவ் ஆடியோ (immersive audio) என்ற பிரிவில் 3வது முறையாக கிராமி விருது கிடைத்துள்ளது.

ஹாரி ஸ்டைல்ஸின்ன் ஹாரிஸ் ஹவுஸ் ஆல்பம் கடந்த ஆண்டின் சிறந்த ஆல்பமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல போனி ரைட்(Bonnie Raitt)-ன் ஜஸ்ட் லைக் தட் (Just Like That) பாடல் சிறந்த பாடலாக தேர்வாகியுள்ளது.

First published:

Tags: Grammy Awards