Home /News /entertainment /

இளம் நடிகை தற்கொலை.. ஆண் நண்பர்தான் காரணமா?

இளம் நடிகை தற்கொலை.. ஆண் நண்பர்தான் காரணமா?

நடிகை பிதிஷா டி மஜூம்தார்

நடிகை பிதிஷா டி மஜூம்தார்

பிதிசா தனது ஆண் நண்பரின் நடவடிக்கையால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பிரபல பெங்காலி மாடல் நடிகை பிதிசா டி மஜூம்தார் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவரது ஆண் நண்பர்தான் காரணம் என குற்றம் சாட்டப்படும் நிலையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிதிசாவின் தற்கொலை அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

பெங்காலி மொழியில் பிரபல மாடலாகவும் நடிகையாகவும் இருப்பவர் பிதிசா டி மஜூம்தார். இவர் கொல்கத்தாவின் டம் டம் நகரில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள சீலிங் பேனில் பிதிசா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படிங்க - தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும்! மாளவிகா மோகனன் போட்டோஸ்

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அவரது வீட்டிற்கு விரைந்து சென்றனர். உள்பக்கமாக பூட்டு போடப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து போலீசார் பிதிசாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பிதிசாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்கொலை செய்வதற்கு முன்பாக பிதிசா கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க - அழகியே... நடிகை அதிதி ராவின் ரீசன்ட் போட்டோஸ்!

பிதிசா தனது ஆண் நண்பரின் நடவடிக்கையால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்ட போலீசார், பிதிசாவின் ஆண் நண்பர் அனுபாப் பேராவிடம் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.

முன்னதாக தெலுங்கு நடிகை பல்லவி தே கடந்த 15-ம்தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வருத்தம் வெளியிட்டிருந்த பிதிசா பல்லவியின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரே தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 
Published by:Musthak
First published:

Tags: Suicide

அடுத்த செய்தி