முதல்நாள் வசூலில் ஏமாற்றிய பெல்பாட்டம்...!

பெல்பாட்டம்

பெல்பாட்டத்தைத் தொடர்ந்து மேலும் பல மெகா பட்ஜெட் இந்திப் படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
அக்ஷய் குமார் நடிப்பில் நேற்று பெல்பாட்டம் திரைப்படம் வெளியானது. ஓடிடியில் வெளியாகும் என முதலில் கூறப்பட்ட நிலையில், திரையரங்கில் படத்தை முதலில் வெளியிடுவது என முடிவெடுத்து நேற்று வெளியிட்டனர். முதல்நாள் வசூலில் பெல்பாட்டம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

கொரோனா பேரிடரால் முற்றிலும் முடங்கிய தொழில்களில் ஒன்று திரைத்துறை. ஓடிடி தளங்களால் பல திரைப்படங்கள் லாபம் சம்பாதித்தாலும், திரைப்பட வர்த்தகத்தின் முக்கிய அம்சமான திரையரங்குகள் முற்றிலும் முடங்கின. பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்கில் வெளியானால் மட்டுமே லாபம் சம்பாதிக்க முடியும் என்ற நிலையில் பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் படமாக பெல்பாட்டம் திரையரங்கில் வெளியாகும் என அறிவித்த போது அனைவரும் பெல்பாட்டத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்தனர். படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து வேறு படங்களும் திரையரங்குக்கு வரும் வாய்ப்புகள் இருந்தன.

நேற்று பெல்பாட்டம் படத்தை 2டி மற்றும் 3டி பார்மெட்களில் வெளியிட்டனர். மகாராஷ்டிராவில் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் டெல்லி மார்க்கெட்டையே பெல்பாட்டம் பெரிதும் நம்பியிருந்தது. படம் முதல்நாளில் 7 கோடிகள்வரை வசூலிக்கும் என கணத்திருந்தனர். பொதுவாக அக்ஷய் குமார் படம் முதல்நாளில் 20 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும்.

Also read... எதற்கும் துணிந்தவன் எப்போது நிறைவடையும்? - சூப்பர் அப்டேட்!

பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படாததால் 7 கோடி ருபாய் வசூலிக்கும் என கணித்திருந்தனர். ஆனால், படம் முதல்நாளில் 2.5 முதல் 3 கோடிகள்வரையே வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம் படத்துக்கு பாஸிடிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் என்பதால் வசூல் இன்றும், நாளையும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பெல்பாட்டத்தைத் தொடர்ந்து மேலும் பல மெகா பட்ஜெட் இந்திப் படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளன.
Published by:Vinothini Aandisamy
First published: