Bell Bottom: 915 திரையரங்குகளில் வெளியாகும் பெல்பாட்டம்!

பெல் பாட்டம்

பெல்பாட்டத்தின் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

  • Share this:
    கொரோனா ஊரடங்குக்குப் பின் திரையரங்கில் வெளியாகும் பெரிய பட்ஜெட் இந்திப் படம் பெல்பாட்டம். இதுவரை 915 திரையரங்குகளில் பெல்பாட்டம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா இரண்டாம் அலை தணிந்த நிலையில் சில மாநிலங்களில் மட்டும் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உள்பட பல மாநிலங்களில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. பல மாநிலங்களில் 50 சதவீத பார்வையாயளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 19-ஆம் தேதி அக்ஷய் குமார் நடித்துள்ள பெல்பாட்டம் திரைப்படம் இந்தியா முழுவதும் 2டி மற்றும் 3டி யில் வெளியாகிறது. நேற்று வரை 915 திரைகளில் பெல்பாட்டம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 395 திரைகளில் வெளியாகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    1. டெல்லி - 2டி - 198, 3டி 197 (395)
    2. பெங்களூரு - 2டி 54, 3டி 74 (128)
    3. ஹைதராபாத் - 2டி 7,0 3டி 43 (113)
    4. அகமதாபாத் - 2டி 26, 3டி 33 (59)
    5. சண்டிகர் - 2டி 38, 3டி 32 (70)
    6. கொல்கத்தா - 2டி 76, 3டி 16 (92)
    7. லக்னோ - 2டி 20, 3டி 4 (24)
    8. இந்தூர் - 2டி 26, 3டி 8 (34)

    பெல்பாட்டத்தின் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. பல இடங்களில் ரசிகர்கள் உற்சாகத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர். பெல்பாட்டத்துக்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து மேலும் பல பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்கில் வெளியாக உள்ளன.

    மகாராஷ்டிராவில் ஆகஸ்ட் 19-க்கு முன் திரையரங்குகள் திறந்தால் பெல்பாட்டத்தின் திரையரங்கு எண்ணிக்கை மேலும் உயரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: